படத்துக்கு பாட்டு எழுதறது ரொம்ப கஷ்ட்டமான விஷயம் தான் ... ஆனாலும் ஆசை யார விட்டுது ... ரயில்ல வீட்டுக்கு போயிட்டு இருக்கும்போது சிந்தனைய தட்டி விட்டேன் ;) பட்டுன்னு வந்த பாட்டு ..
ஆண்:
இதயம் உண் கண்ணில் மெதுவா
உருகும் அந்த தருணம் இதுவா
வெண்ணிலவே உந்தன் பிம்பம்
கண்டிடவே நெஞ்சம் ஏங்கும்
நடு சாமத்திலே உள்ளம் வாடும்
பெண்:
காதல் சொல்லவே மனது ஏங்க
நாணம் மெல்ல நிறுத்தி போக
மௌன மொழிகள் உனக்கு கேக்காதோ !!!
ஆண்:
சொப்பனங்கள் செத்து விழ உன் நினைவு வட்டம் இட
நானோ இல்லை யாரோ
தேனோ உன் பேரோ
பெண்:
நெஞ்சுக்குள்ள சோகம் இல்ல உன் நினைவே போதும் வெல்ல
ஏனோ பிழை ஏதோ
கூறு பதில் கூறு
ஆண்:
இதயம் உன் கண்ணில் மெதுவா
உருகும் அந்த தருணம் இதுவா
பெண்:
பூக்களே என் காதினில் கொஞ்சும்
உன் கைகளில் என் வாழ்வும் தஞ்சம்
ஆண்:
என் வானிலே ஒரு கோடி பூக்களும் விழுந்ததுவோ
காதோரம் சலங்கைகள் மணி சத்தம் எழுந்ததுவோ
ஆண் - பெண் (Chorus):
காலன் கூட பக்கம் வர எண்ணம் இல்ல
கொண்ட காதல்
கொஞ்சும் பாடல்
நெஞ்ச கொண்டு
கொள்ளை போக
ஆண்:
இளவேனில் கானம் ஒன்று
உன் இதயம் தேடும் அன்று
என் வானம் விடியும் என்று !!!
ஆண்::
இதயம் உண் கண்ணில் மெதுவா
உருகும் அந்த தருணம் இதுவா ...!!!
****
பிழைய பொறுத்து பாட்ட படிச்சதுக்கு நன்றி நன்றி நன்றி :)