மசாலாக்கள், குத்து பாட்டுகள், அதிரடி சண்டைகள் என்று வலம் வந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவிற்கு இது போன்ற படங்கள் ஒரு வரப்பிரசாதம். நான் குறிபிடுவது சமீபமாக வெளி வந்த 'நான் கடவுள்' தான்.
படம் பார்த்து விட்டு வீடு வந்த நான் இது ஏன் இவளவு மிகை படுத்த பட்டுள்ளது என்று நினைத்து, அடுத்த நாலு நாட்கள் தூங்க முடியாததை உணர்ந்தேன். காரணம், மனதை பிழிந்த யதார்த்தமான சம்பவங்கள் மற்றும் அதை சித்தரிக்கப்பட்ட விதம். பாலா கண்டிப்பாக தமிழ் திரை உலகை அடுத்த நிலைக்கு துரிதமாகவும் லாவகமாகவும் எடுத்து சென்று விட்டார்.
கல்லூரி, காதல், சண்டை, அரசியல், அடாவடி இது தான் வாழ்க்கை என்று நினைத்து கொண்டுஇருந்தவர்களுக்கு அகோரி எனப்படும் சாதுக்கள் மற்றும் குண்டர்கள் பிடியில் சிக்கி தவிக்கும் பிசைகாரர்களையும், துல்லியமான திரை கதையுடன் நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளார் பாலா. ஆர்யா அகோரியாக திரையில் வலம் (வாழ்ந்து) வந்தாலும் அவர் தேவைக்கு அதிகமாகவே சிரமபட்டிருகிறார் அல்லது அவர் சிரமபட்டிருபதற்கு ஏற்ப இன்னும் கட்சிகளை வைத்திருக்கலாம் என்று தான் சொல்ல வேண்டும்.
பிட்சை காரர்களாக நடித்தவர்கள் தான் படும் கஷ்டங்களையும் தாண்டி அவர்கள் செய்யும் நய்யான்டிகளும் குறும்புகளும் சிரிப்பை வர வைப்பதோடு கண்களில் நீரையும் எட்டி பார்க்க செய்கிறது. இன்று பெரிய நடிகர்கள் என்று சொல்லி கொண்டு அலையும் பல டாப் ஸ்டார்கள் இவர்களிடம் யதார்த்தமாக நடிப்பது எப்படி என்று பிட்சை எடுக்க வேண்டும்.
பூஜா அபாரமான நடிப்பு இல்லை என்றாலும் கொடுத்த வேலையயை கட்சிதமாக செய்திருக்கிறார். சீ சீ என்ன வேடம் இது என்று பந்தா பண்ணிகொண்டிருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் இதை சவாலாக ஏற்று முயற்சித்ததில் பூஜாவிற்கு எனது வாழ்த்துக்கள். பாடல்கள் மனதில் நிற்க வில்லை என்றாலும் பின்னணி இசை பிரமாதம். இளையராஜா எதிர்பார்புகளை நிரப்பி இருக்கிறார்.
எவ்வளவு சிறப்பான படமாக இருப்பினும் படத்தில் உள்ள அதிக கோர கட்சிகளாலும் , மனதை பாதிக்கும் சம்பவங்கள் இருப்பதாலும் நான் ஒரு பொழுதும் இதை இளகிய மனம் கொண்டவர்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கண்டிப்பாக பரிந்துரை செய்ய மாட்டேன்.
அன்றாடம் சந்திக்கும் பிட்சை காரர்களை அலட்சிய படுத்தி அவசர உலகில் அலை பாய்ந்து கொண்டிருபவர்கள் இனி அவர்கள் பார்க்கும் பிட்சை காரருக்கு ஒரு ருபாய் போட்டாலும் படம் வெற்றி என்று தான் அர்த்தம்.
'நான் கடவுள்', செதுக்கப்பட்ட யதார்த்தம்
இருட்டு உலகின் அப்பட்ட வெளிச்சம்
பாலா வின் துணிச்சலான முயற்சிகள் தொடர, தமிழ் திரை உலகம் உயர என்றும் வாழ்த்தும்
- தமிழ் திரை ரசிகன்
2 comments:
i didnt like the movie da.. definitely a bold move by bala, but total sothappal..
Nice attempt in Tamil. The only issue I have with writing in Tamil is, it is so different from spoken Tamil and hence loses the feel of natural flow.
Post a Comment