குமுதமா இல்லை குங்குமமானு தெரியல ஆனா எனக்கு இந்த பயோ டேட்டா பகுதி ரொம்பவே புடிக்கும். நானும் அது மாறி முயற்சி பணலம்னு இத எழுதறேன்.
என்னை பத்தி நானே .... படிங்கோ படிங்கோ !!!
பெயர் : பிறந்த போது அரவிந்த் ( இப்ப மட்டும் நீ என்ன மைகேல் ஜாக்சன் நெனப்பானு நீங்க கேக்கறது தெரியுது )
வயது : காலேஜ் பசங்க மச்சின்னு கூப்டலாம்... ஆனா எதிர் வீடு பய்யன் UNCLEனு கூப்டறான் .....
குடும்பம் : இப்போதைக்கு முக்கோணம் (நாம் இருவர் நமக்கு ஒருவர்)
வசிக்கும் நாடு : மதுரைக்கு இணையாக தமிழ் போற்றும், சிங்கப்பூர்
உத்தியோகம் : பெருமையா சொல்லிக்கற அளவுக்கு தமிழ் வாத்தியாரும் இல்லை... கௌரவமா சொல்லிக்கற அளவு விவசாயமும் இல்லை.... எதோ கம்ப்யூட்டர் கூட இபோதைக்கு காலத்த ஓட்டறேன்.
படிப்பு : தமிழ்ல்ல பிடிக்காத வார்த்தை
ஹர்ட் வொர்க் : இங்கிலிஷ்ல பிடிக்காத வார்த்தை
வெட்டி அரட்டை : எல்லா மொழியிலயும் புடிச்ச வார்த்தை ( ஹி ஹி எப்புடி Rhymingu)
உயரம் : சத்யராஜ் விட கூட
எடை : நமீதா விட கம்மி (எப்புடி)
பொழுது போக்கு : புகை படம் எடுப்பது, ப்ளாக் எழுதுவது, படம் (கேவலமா இருந்தாலும் ) பாப்பது, எதுக்கு போறோம் எங்க போறோம்ன்னு தெரியாம காட்ல அலையறது (Trekking எப்படி தமிழ்ல்ல விளக்கறதுனு தெர்லபா ), நீச்சல், Kayaking
விளையாடுவது : டென்னிஸ், கிரிக்கெட், ச்நூகர்,
சமீபத்திய சந்தோசம் : சிங்கப்பூர், அச்யுத்
நீண்ட நாள் சந்தோசம் : தமிழ் பற்றோட இருக்கறது
சிறந்த மனிதர்கள் : பகுத்தறிவு பாராட்டிய ஈ.வே.ரா, அன்னை தெரேசா, ரஜினிகாந்த், இந்திய ராணுவ சிப்பாய்கள் (தயவு செய்து இதுல கேப்டன் சேத்துடாதீங்க !!!)
தமிழனின் பெருமை : 'ஆஸ்கார்' ரஹ்மான், படிக்காத மேதை காமராஜர், அப்துல் கலாம், திருவள்ளுவர்
கடவுளை பத்தி : பாராட்ட பட வேண்டிய நம்பிக்கை
வெறுப்பது : இன/ஜாதி வெறி, Dictatorship (இதுக்கு தமிழ்ல என்னனு தெர்ல), அறிவுரை சொல்றேன்னு ஒரு மணி நேரம் மொக்கை போடறவங்க, திறமையை தொலைச்சிட்டு திமிர் மட்டுமே வச்சுகிட்டு அலையற 'இளைய' தளபதிகளும் 'தம்மா துண்டு' சூப்பர் ஸ்டார்களும் ... இன்னும் நெறைய ...
மறுக்கா மறுக்கா பாக்கற தமிழ் படங்கள் : அன்பே சிவம், அந்நியன், பாட்ஷா, நாயகன், கர்ணன், தமிழன், மற்றும் பல ...
ரசிச்சி செய்றது : வேலை நெறைய இருக்கும் போது ப்ளாக் எழுதறது, பொதுவான எதிரியபத்தி ( வேற யாரு மேனேஜர் தான்) தோஸ்த் கிட்ட திட்டி தீக்கறது, அடுத்த வருஷம் எங்க ஊர் சுத்தலாம்னு இப்பவே திட்டம் போடறது...
இதுக்கு மேல எழுத முடியல .... இதுக்கே கண்ணா கட்டுது .... பிழையை பொறுத்து படிச்சதுக்கு
நன்றி நன்றி நன்றி !!!
7 comments:
Dude.. You should write something which anyone can read.. Sorry i can't read tamil da...
Good one dude.
"வயது : காலேஜ் பசங்க மச்சின்னு கூப்டலாம்... ஆனா எதிர் வீடு பய்யன் UNCLEனு கூப்டறான் ....."
ROFL
hay dude....First time Mr.Sonu Gupta wrote coments for the blog which he cannot read ..... ATleast translate it!!!!!!!!!!!
பொழுது போக்கு : ennada JP yai otrathu pathi ezhuthave illai?
நீண்ட நாள் சந்தோசம் : dey kumutham, kungumam padichittu tamil patru maintain panraeya da.... nee padam paakkrathukku thaane da, anth magz ellam eduppe... hehhe
Dictatorship : sarvaathigaari
awesome!!!!
awesome!!!!
awesome!!!!
Post a Comment